Friday, January 27, 2012

331 இதயம் ஒரு கோவில்





இதயம் (இசையும்) ஒரு கோவில்

இணையதளம் பேஸ்புக்கில் எப்போது சென்றாலும் ஆன்லைனில் பார்க்க முடிகின்ற திரையிசை பின்னணி பாடகர் திரு.யுகே.முரளி அவர்களின் தொலைபேசி வானொலி பேட்டி நிகழ்ச்சி இன்று (27.01.2012) காலை ஒலிபரப்பட்டது. நான் வேலை செல்லும் அவசரத்திலும் இந்த நிகழ்ச்சியை
கேட்டு பதிவு செய்து உங்களூக்காக வழங்குகிறேன். எனது பேஸ்புக் நண்பர்களான திரு.முரளி அவர்களூம் அவரை பேட்டி எடுத்த அறிவிப்பாளர் திரு.சந்தீப் அவர்களூம் சேர்ந்து வழங்கியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் திரு.சந்தீப் அவர்களூம் பேஸ்புக்கில் தினமும் உள்ளே வரும் ஓர்இனிய நண்பர். அவரின் நிகழ்ச்சிகளூம் வானொலியில் பலதடவை கேட்டுரசித்துள்ளேன் இந்த நிகழ்ச்சியிலும் திரு.முரளியுடன் மிகவும் சர்வசாதரணமாக கேள்வி கேட்டு வழங்கியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. மேலும் வளர்ந்து வரும் பாடகர் திரு. முரளி அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்வதில் . அதிகாலை முதல் அவரிடம் தொலைபேசியில் உரையாடி அவரிடம் ஓர் அழகான, இனிமையான நிகழ்ச்சியை வழங்கிய அறிவிப்பாளர் திரு.சந்தீப் அவர்களூக்கும், திரு.முரளி அவர்களூக்கும் நன்றி. அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. முரளி அவர்கள் மேன்மேலும் பல நல்ல பாடல்களை நேயர்களுக்கு வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அதுமட்டுமல்லாமல்.. இவர் சென்னையில் உதயராகம் என்ற ஒரு இசைக்குழுவை பல ஆண்டுகளாக நடத்தி வருவது பலருக்கும் தெரிந்ததே இதோ அவரின் இசைக்குலுவின் இணையதளம் இங்கே பார்க்கலாம்.

யு.கே.முரளி அவர்களின் உதயராகம் இசைக்குழுவின் இணையதளம் இங்கே சென்று பார்க்கலாம்.


அதுமட்டுமல்லாமல் எனக்கு இசையும் ஒரு கோயில் தான் என்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் பாடிய பாடல்களை விரும்பி பாடுபவர் என்று நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அந்த வகையில்
அவர் விரும்பி கேட்ட இளையராஜா அவர்கள் பாடிய இதயம் ஓரு கோயில் என்ற பாடலை கேட்டிருந்தார் அறிவிப்பாளர் சந்தீப் பிரபல பாடகர் டாக்டர் எஸ்.பி.பாலசுபரமணியம் அவர்கள் பாடிய இதயம் ஒரு கோயில் பாடலை இறுதியில் ஒலிபரப்பியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது என்றால் மிகையாகாது. இதற்காக அவருக்கும் மீண்டும் ஓர் நன்றி.

1.நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
2.அடடா அடடா மழை தான்
3.இதயம் ஒரு கோவில்

பாடகர் திரு.யு.கே முரளி அவர்களின் வானொலி பேட்டி இங்கே

330 நாடு நாடு அது தானே வீடு


திரு.கமலநாதன் படம் உதவி நன்றி பூக்கடை மணி




சென்ற குடியரசு தினத்தன்று மாலை வானொலி நெட்வொர்க் நிகழ்ச்சியில் அதிகபட்சம் தமிழ்நாட்டு வானொலி நேயர்கள் கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு தான் இவை. இந்த நிகழ்ச்சியை கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராக இருந்த திரு.கமலநாதன் அவர்கள் தான் மிகவும் சிறப்பான கேள்விகளை கவிஞரிடம் கேட்டு மிக அழகான பதில்களை பெற்று தந்தார். வழக்கம் போல்
வைரமுத்து அவரள் தன் கணீர் குரலில் மிகவும் நிதானமாக பேசியது புதிய அறிவிப்பாளர்களுக்கு ஓர் நல்ல தொரு அனுபவம் கவிஞர் அவர்களின் பாடல் வரிகள் மட்டுமல்ல அவரின் பேச்சு குரலையும் நான் விரும்பி கேட்பவன் அந்த வகையில் நான் மிகவும் விரும்பி ரசித்த இந்த ஒலித்தொகுப்பை இனியபாடல்களூடன் கேட்டு மகிழுங்கள். உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளையும் எழுதுங்கள்.

1.மடைதிறந்து தாவும் நதியலை நான்
2.நாடு நாடு அது தானே வீடு
3.சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
4.ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்
5.ஒரு பண்பாடு இல்லையென்றால்
6.சின்ன சின்ன ஆசை

கவிஞர் வைரமுத்து அவர்களின் இனிமையான பேட்டி : பேட்டி எடுத்தவர் சென்னை வானொலி இயக்குனர் திரு.கமலநாதன் அவர்களின் உரையாடல் தொகுப்பை இங்கே கேட்கலாம்.

மேலும்,இத்துடன் பொங்கல் திருநாளில் எல்லா நதியிலும் தமிழ் ஓடம் என்ற இனிமையான ஒலிபரப்பட்ட வானொலி நிகழ்ச்சியையும் சென்னை அறிவிப்பாளினி திருமதி ஸ்வாதி தணிகாச்சலம் அவர்களூம் மிகவும் அருமையான கேள்விகள் தொடுத்து ஒரு ஸ்வாரசியமான பதில் மாலையாக நமக்கு வழங்கினார். இதோ இந்த நிகழ்ச்சியின் பாடல் தெரிவுகளூம்
உங்களூக்காக.

1.பூங்காற்று திரும்புமா
2.அட ரா ரா ராமையா
3.காதல் அணுக்கள்
4.உலகமெங்கிலும் உன்னை

பொங்கல் திருநாளில் எல்லா நதியிலும் தமிழ் ஓடம் என்ற இனிமையான ஒலிபரப்பட்ட வானொலி நிகழ்ச்சியையும் இங்கே கேட்கலாம்.

Friday, January 13, 2012

229 எங்கள் பாரத தேசம்




நேற்று விவேகானந்தர் 150 ஆவது பிறந்தநாள் இதன் தொடர்பாக வானொலியில் நான் கேட்ட இனிமையான உன்னதமான நிகழ்ச்சி. இன்றைய இளைஞர்கள் நாளைய என்ற தலைப்பில் எனது அருமை அன்பர் அறிவிப்பாளர் திரு.சந்துரு அவர்கள் மிகவும் அழகாக தொகுத்து வழங்கினார். இளஞர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் தெரிவுகளூம். ஸ்வாமி விவேகானந்தர் அவர்களின் பொன்மொழிகள் அவரைப் பற்றிய தகவல்களை நாம் நம் பள்ளிப்பருவத்தில் படித்து தெரிந்திருந்தாலும் அப்போது நம் படிக்க வேண்டிய கட்டாயத்தில் படித்திருப்போம் அப்போது இருக்கும் சூழ்நிலையில் படித்தது இப்போது நம் மனதின் ஆழத்தில் இருந்தாலும் அதை மேலே கொணர்ந்து ஒலித்தொகுப்பாக கேட்கவும் வித்தியாசமான உணர்வுகளை நம்மனதிலும் உருவாக்குகிறது இந்த ஒலித்தொகுப்பு அந்த வகையில் ஸ்வாமியின் அற்புத தகவல்களூம், அவரின் பொன்மொழிகளூம் ஒருங்கிணைத்து இனிய பாடல்களூடன் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் கோவை வானொலி ஜாம்பவான் நேயர்கள்
(காந்திபுரம், பூக்கடை மணி, திருப்பூர் டி.கே.சங்கர், திருப்பூர்.மனவை கா.சந்திரசேகர், கொடுக்காபட்டி ஜெயகுமார், செல்வபுரம் சிங்காரவேலன், வரதராஜபுரம் விஜயகுமார், காரப்பன், வெள்ளிங்கிரி,ஹரிஹரன்,தங்கராஜ், கன்னிமுத்து , சுகம் ராஜா, பொன்னுசாமி) ஆகியோரின் கருத்துக்களூம் இடம் பெற்றது கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியடைகிறது. லட்சக்கணக்கில்
கேட்ட இந்த ஒலித்தொகுப்பை 100 இளைஞர்கள் வேண்டாம் ஒருவர் உணர்ந்து ஸ்வாமியின் பின்னால் சென்றாலே போதும் இந்தியா முன்னேற்ற பாதையில் சென்றுவிடும். எழுமின், விழுமின், உழைமின் என்ற தாரக மந்திரத்தை எழுந்திரு, விழித்திரு மற்றும் என்றும் உழைத்திரு என்ற காரணத்தை உணர்ந்தாலே போதும்
இளைஞர்களில் வாழ்வில் நலம் சேர்த்து இந்தியாவிற்கு வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஒலித்தொகுபை உருவாக்கி வழங்கிய அறிவிப்பாளர் திரு.சந்துரு அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டுவிட்டு நேயர்கள் சொன்னது போல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களையும் இங்கே நீங்களூம் சொல்லலாமே?

1.எங்கள் பாரத தேசம்
2.நாளை நமதே இந்த நாளூம்
3.பூட்டிய சிறையினை உடைப்போம்
4.வேள்வி செய்யும் வேலை வந்தது
5.இறைவா தாயும் நீயே

இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியா என்ற தலைப்பில் ஒலிஉலா வந்த ஒலிதொகுப்பு இங்கே கேட்கலாம்.

Wednesday, January 11, 2012

228 நெஞ்சில் குடியிருக்கும்



இசையமைப்பாளர் : எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களின் ஒலித்தொகுப்பு தான் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கிறது. பொதுவாகவே அறிதான பாடல்கள் கேட்பது சிரமம் அதுவும் பிரபல இசையமைப்பாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்கள் இசையமைத்த பாடல்கள் கேட்பது என்றால் அழியாத பொக்கிஷம் தான் இந்த ஒலித்தொகுப்பை வழக்கம் போல் தன் பாணியில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.என்ன செய்தாய்
2.வீரிய மானிடனே
3.அறிவுக்கு விருந்தாகும்
4.சந்திரோதயம் இதிலே
5.கிரிதர கோபாலா
6.காற்றினிலே வரும் கீதம்
7.பிருந்தாவனத்தின்
8.நெஞ்சில் குடியிருக்கும்
9.பருவம் பார்த்து அருகில்
10.கண்ணாலே காணாமல் வந்தேனே

நெஞ்சில் குடியிருக்கும் பாடல் தொகுப்பு இங்கே

Monday, January 9, 2012

227 அடி கானா கருங்குயிலே



அகில இந்திய வானொலியில் அதி தீவிர ரசிகர் ஐயா ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு.பழனிசாமி மற்றும் வனஜா பழனிசாமி ஆகியோர் தம்பதியருக்கு பிறந்த அவர்களின் புதல்வர் திரு. பாரதி வாசன் துணைவியார் திருமதி. சன்முகப்பிரியா அவர்களின் பெயரில் ஒலி உலா வந்த இந்த ஒலித்தொகுப்பு சென்ற ஞாயிறு அன்று மாலை கேட்க முடிந்தது. ஒலித்தொகுப்பில் பாடல் தெரிவுகள் மலரி மலரி மலரி அருமை பல மலரே அடி அடி அடி அடி தடவை கேட்டு ரசித்திருந்தாலும் அந்த பாடல்களின் சாராம்சத்தை பிழிந்து எழுத்துக்களாக வடித்து ஆக்கத்தை உருவாக்கியிருந்தார் திருமதி. சன்முகப்பிரியா அவர்கள். அதை தாங்கள் காது குளிர கேட்க ஆசைப்படுவீர்கள் என்று எண்ணுகிறேன். பாடல்கள் இடையிடையில் அவரின் எழுத்துருக்கள் மிகவும் அழகாக தொகுக்க ப்பட்டுள்ளன. மேலும் இந்த ஒலித்தொகுப்புக்கு மெருகேற்று வகையில் அறிவிப்பாளர் எனது இனிய நண்பர் திரு. சந்துரு அவர்களின் குரல் ஆழ்கடலின் அமைதியை உணர்த்தும் குரல். இந்த ஒலித்தொகுப்பிற்க்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது என்றால் மிகையாகாது. இதோ கீழே உள்ளது தான் ஆக்கத்தை உருவாக்கியவரின் பாடல் கேட்டு தான் பாருங்களேன். இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க் திருமதி.சன்முகபிரியா அவர்களூக்கும் அறிவிப்பாளர் திரு.சந்துரு அவர்களுக்கும் மேலும் பல வகையில் துணையாக இருந்து இணையள நேயர்கள் கேட்டு இன்புற வாய்ப்பளித்த நல் இதயஙக்ளுக்கும் என்றென்றும் நன்றி.

1.மாரியம்மா மாரியம்மா
2.அம்மா என்றழைக்காத
3.கண்ணுக்கு மை அழகு
4.சின்ன சின்ன ஆசை
5.மலரே குறிஞ்சி மலரே
6.அடி கானாகருங்குயிலே
7.போறாளே பொன்னுத்தாயி


சன்முகப்பிரியா அவர்களின் இவ்வார நேயர் ஒலித்தொகுப்பு

Friday, January 6, 2012

226 மேகம் மிதக்கும் வானம்



மேகம் மிதக்கும் வானம் -- இந்த பதிவை பற்றி சொல்லப்போனா இசை மேகம் மிதக்கும் மனம். 5.1.௨0௧௨ அன்று கோவைக்கு திரும்பும் போது இரவு வானொலியில் சென்னை வானொலி நிகழ்ச்சியை கேட்க நேர்ந்தது. மனதை ரம்மியமாக்கும் பாடல் தெரிவுகளூடன் அறிவிப்பாளர் திரு.ஸ்ரீனிவாஸ் அவர்கள் கடலில் மிதக்கும் ஓடம், படகு, கப்பல் ஆகிய தொடர்பான பாடல்களை மிக அற்புதமாக அமைதியான குரலில் தொகுத்து வழங்கினார். மேலே சொன்னது போல் ஓர் இசை மேகம் நம் மனதில் தவழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. பாடல் கேட்ட பாடல்களாக இருந்தாலும் ஒரு தொகுப்பாக கேட்பதற்கு ஓர் வித்தியாசமான அனுபவம் தான். கேட்டுதான் பாருங்களேன்.

1.பூங்காத்தே வீசு
2.சித்திர செவ்வானம்
3.பொங்கும் கடலோசை
4.ஓடம் நதியினிலே
5.அதோ அந்த பறவைபோல
6.மேகம் கருக்கையிலே
7.ஆசையே அலைபோலே
8.அம்மம்மா கேளடி தோழி
9.வசந்த கால நதிகளிலே
10.தங்கத்தோனியிலே

மேகம் மிதக்கும் வானம் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.

Follow by Email