எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் தன் ரம்மியமான குரலில் வழக்கம் போல் வித்தியாசான பாடல்களூடன் நேற்று மயிலிறகால் என் மனதை வருடினார். இதோ உங்கள் செவிகளுக்கும் அணிவித்து அழகுபார்க்க விரும்புகிறேன். பாடல்களை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தாருங்கள் அன்பர்களே.
1.ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன் -பொம்மை கல்யாணம் 2.பூவாடை.. பாவாடை.. - தேடி வந்த செல்வம் 3.ஹஹ்ஹா இன்ப தேன் நிலவு - எதிர்கள் ஜாக்கிரதை 4.பக்கம் வந்து பக்கம் வந்து - யார் நீ 5.வீரமென்னும் பாவைதன்னை - தர்மம் எங்கே 6.காட்டு குயிலுக்கும் நாட்டு குயிலுக்கும் - அழகு நிலா 7.சிட்டு குருவிகென்ன கட்டுபாடு - சவாலே சமாளி 9.தஞ்சாவூர் சீமையிலே - தேர்திருவிழா 10.ஹவ் ஹவ் எத்தனை அழகு - அதே கண்கள் 11.ஜெனிதா வனிதா - அவன் தான் மனிதன் 12.வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது - அவளும் பெண்தானே 13.கீதா கீதா ஒரு நாள் - அவள் 14.ஜிலு ஜிலு குளு குளு - வெள்ளிக்கிழமை விரதம் 15.வாரேன்.. வழி காத்திருப்பேன் - உழைக்கும் கரங்கள்
வெள்ளித்திரையில் நம்மை கடந்து சென்றவர்கள் பற்றிய நினவு ஒலிதொகுப்பு இவை. மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் எனது அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜே.சந்தீப். மறைந்த திரைகலைஞர்களைப் பற்றி பல தகவல்கள் சேகரித்து இனிய பாடல்களுடன் ஒரு ஒலித்தொகுப்பாக நேற்று இரவு வழங்கியதை இங்கே உங்களுக்காக அவருக்கு இணைய ரசிகர்கள் சார்பாக நன்றி. வாழ்த்துக்கள் சந்தீப் சார்.
1. எடிட்டர் பாலகுருசிங்கம் - பொன்னொன்று பெண் அங்கு இல்லை 2. தக்ஷினாமூர்த்தி - மாசில்லா உண்மை காதலே 3. ஆர்.என்.கே. பிரசாத் -சின்ன கண்ணன் அழைக்கிறான் 4. எஸ்.என்.லக்ஷ்மி - சேதி கேட்டோம் சேதி கேட்டோம் 5. சன்முகசுந்தரி - தாயிற் சிறந்த கோவிலுமில்லை 6. என்னத்த கண்ணைய்யா - அட பாதங்களே நீங்க 7. எம்.சரோஜா - மாமியாருக்கு ஒரு சேதி 8. வி.ஜெயலக்ஷிமி - மாலை நேரமிது சோலக்குயில் 9. மைனாவதி - வண்டி உருண்டோட அச்சாணி 10.காகா ராதாகிருஷ்னன் - காதல் கனிரசமே 11.ஒளிப்பதிவாளர் கர்ணன்
பார்த்த ஞாபகம் இல்லையோ ? ஏன் இல்லை? சமீபத்தில் டி.வியில் இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் நடிகை சௌர்கார் ஜானகி இருவரையும் பேட்டி நிகழ்ச்சி கண்டேன். பாலசந்தரை விட பெரியவங்க சௌக்கார் ஜானகி அவரைப்பற்றிய பல அறிய தகவல்களை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. இதோ கீழே உள்ள ஒலிகோப்பு அதுவல்ல. வானொலியில் சில மாதங்களூக்கும் முன் அறிவிப்பாளர் எனது அருமை நண்பர் திரு. க.சுந்தரராஜன் தனக்கே உரிய பாணியில் அழுத்தம் திருத்தமாக பல அறிதான தகவல்களூடன் இனிமையான பாடல்களை வழங்கி பேசி மிகவும் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கேட்பதற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதோ உங்கள் செவிகளுக்கும். கேட்டு உங்கள் கருத்துகளையும் தாருங்கள்.
1.அடுத்தாத்து அம்புஜத்தை
2.ஆனி முத்து வாங்கி வந்தேன்
3.பார்த்த ஞாபகம் இல்லையோ
4.புன்னகை மன்னன் பூவிழி
5.நீரோடும் வைகையிலே
6.இறைவா உன் மாளிகையில்
7.ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
8.படித்ததினால் அறிவு பெற்றோர்
9.யாருக்கு மாப்பிள்ளை
10.மாலைப்பொழுதினில் மயக்கத்திலே
புதுவருட நிகழ்ச்சியாக சென்ற வாரம் வானொலியில் ஒலிபரப்பிய அவ்வையாரின் மூதுரை வென்பாக்களில் இருந்து சில வென்பாக்கள் திரையிசையுடன் எப்படி இணைகிறது என்ற ஓர் அற்புதமான ஒலித்தொகுப்புதான் இவை. இந்த ஒலித்தொகுப்பை குறிகிய காலத்தில் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. சந்துரு அவர்கள். இவரின் சாந்தமான குரலில் மயிலிறாகா இரவு நேரத்தில் கேட்பதற்க்கு மனதிற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு தனியார் உயர்நிலை பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசரியரான இவர் தமிழ் மீது அபாரமான காதல் கொண்டவர்.அதன் விளைவாக வந்தது தான் இந்த ஒலித்தொகுப்பு இப்பேர்பட்ட அறிதான ஒலித்தொகுப்புகள் பாசப்பறவைகள் தளத்தில் பதிய நான் மிகவும் பெருமைபடுகிறேன். பள்ளிப்படுவத்தில் ஒவையாரைப்பற்றி ஏட்டில் படித்தது பல வருடங்கள் கழித்து அவரின் மூதுரை வென்பாக்கள் சிலவற்றை திரையிசையுடன் கேட்கும் போது மனது இதமாக இருக்கிறது. இதை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் எனது இனிய நணபர் திரு.சந்துரு அவர்களுக்கும் இதை உருவாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.
குறிப்பு: ஒலித்தொகுப்பு சுமாராக இருந்தாலும் கேட்கும் படி இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களூக்கு இங்கே பதிவிறக்கமாக வழங்குகிறேன் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதுங்கள் அன்பர்களே.
சொல்லும் பொருள் தேடி ....
1. இளமையில் வறுமை >> பூஞ்சிட்டு கண்ணங்கள்
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.
2.அறிவு இல்லாதவனின் இழிவு >> நான் ஒரு முட்டாளுங்க
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.
3.அறிவு செல்வம் குணம் >> கல்வியா செல்வமா வீரமா
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
6.மருந்தும் உடன்பிறப்பும் >> முத்துக்கு முத்தாக
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
7.மனைவியின் மாறாத மனது >> மனவி அமைவதெல்லாம்
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.
8. அடக்கத்தின் சிறப்பு >> இப்படித்தான் இருக்க வேண்டும்
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
9.நல்லவர்களால் நண்மை ஏற்படும் >> நல்லவருகெல்லாம்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
10.தீயவர்களின் தொடர்பு தீமைதரும் >> குற்றம் புரிந்தவன்
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.