Sunday, May 26, 2013

384 நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே




பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் தீயுடன் சங்கமமாகியது டி.எம். சவுந்தரராஜனின் உடல்... பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன்( வயது 91) சென்னையில் நேற்று காலமானார். என்ற செய்தி கேள்பட்டதும் உடனே  பதிய முடியாவிட்டாலும் 
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே என்று ஏழிசை வேந்தன் டி.எம். சௌந்தரராஜன் குரலில் மயங்கிய உள்ளங்கள் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியாக கீழே உள்ள இறுதி சடங்கின் காட்சி அமைந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த ஒலி, ஒளி ஊடங்ககளும் இரங்கலை தெரிவித்து  அவரின்  இனிமையான காலத்தால் மறக்க முடியாத படி இசை ரசிகர்களின் உள்ளத்தையும்  அசைத்து  போட்டு விட்டது  என்பது தான் உண்மை.

இதோ இணையதள நேயர்கள் சார்பாக  இந்த பாசப்பறவைகள் வலைப்பூவும் தன் கண்ணீர் அஞ்சலியை  செலுத்துகிறது.  வான் வெளியில் ஒலி உலா வந்த அவரின் இனிய நினவு குரலின் தொகுப்பு நிகழ்ச்சி இன்று  ஏழிசை மன்னர் டி.எம்.எஸ் அவர்களை நினைந்து நினைந்துநெஞ்சம் உருகுகிறது.

கோவை ரசிகர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை பிரதிபலித்து  மிகவும் சிறப்பாக இந்த இரங்கல் ஒலித்தொகுப்பை  வழங்கிய அறிவிப்பாளர் பேராசிரியர் திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு நன்றி.



பகுதி 1



1.பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
2.அண்ணையை போல் ஒரு தெய்வம் இல்லை
3.இரவும் வரும் பகலும் வரும்
4.நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
5.செல்லக்கிளியே மெல்லப் பேசு
6.இரண்டும் மனம் வேண்டும்

பகுதி 2




7.செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
8.முருகா என்றதும் உருகாதா மனம்
9.மெழுகுவர்த்து எரிகின்றது
10.வாய்மையே வெல்லுமடா
11.தண்ணீரிலே தாமரைப்பூ

Follow by Email